அரசியல்

மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திட்டக்குழு 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அதில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மாநில வளர்ச்சி கொள்கை குழு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தற்போது மாநில வளர்ச்சி கொள்கை குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணை தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் இராம சீனுவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மல்லிகா சீனிவாசன், மருத்துவர் அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில வளர்ச்சி கொள்கைக்குழு, இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குகிறது.