ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன்மனு தள்ளுபடி… நீதிபதி உத்தரவு…
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், பி.எஸ்.பி.பி. என்றழைக்கப்படும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பின்போது, இடுப்பில் துண்டுடன் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் முன்னிலையில் தோன்றியதாகவும், அவர்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமீன்கோரி, ஆசிரியர் ராஜகோபாலன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ராஜகோபாலனுக்கு ஜாமீன்வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
