இந்தியா

தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து… 4 பேர் படுகாயம்…

புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

புதுச்சேரியின் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிறுவனத்தில் உள்ள பாய்லர் ஒன்று வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பணியாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.