”இது ஜனநாயகம்தானா?” ”என்னையும் கைது செய்யுங்கள்” #ArrestMeToo – மீண்டும் சர்ச்சை ட்வீட் போட்ட நடிகை ஓவியா
பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. ஆனால்பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு ஓரிரு படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் , ட்விட்டரிலும் அவ்வப்போது ஆக்டிவாக இருந்துவந்தார்.
பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும். இதுபோன்று கடந்த பிப்ரவரி மாதத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக மோடி தமிழகம் வந்தபோதும், இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. அப்போது நடிகை ஓவியாவும் இந்த ஹேஷ்டேக்கைப் பதிவிட்டிருந்தார். இதற்காக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஓவியா மீது பா.ஜ.க-வினர் புகார் அளித்தனர். அப்படி புகாரளித்தும் ஓவியாவிடம் இருந்து எந்த மாற்றமும் இல்லை.
கடந்த மாதம் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் வழியாக உரையாடினார் ஓவியா. அப்போது, மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்துச் சொல்லுங்கள்'' என்று ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு ஓவியா,என்ன பண்றது சார்… எல்லாம் சிரிப்பா இருக்கு” என்று அவர் `பிக் பாஸி’ல் பேசிய வசனத்தை மீம் வடிவில் ஷேர் செய்திருந்தார். இதை ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி அரசுக்கு எதிராக ஓவியா பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.
டெல்லியில் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில், “மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தீர்கள்?” என்று கேள்வியெழுப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த போஸ்டர் விவகாரத்தில் சுமார் 25 பேரைக் கைதுசெய்தது டெல்லி போலீஸ். இதில் பெரும்பாலானவர்கள் போஸ்டர் ஒட்டும் கூலித் தொழிலாளிகள் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக #ArrestMeToo என்கிற ஹேஷ்டேக் கொண்டு பலரும் ட்விட்டரில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். நடிகை ஓவியாவும் அவர் பங்குக்கு, இது ஜனநாயகம்தானா?'' என்று கேள்வியெழுப்பியதோடுஎன்னையும் கைதுசெய்யுங்கள்” என்ற பொருளிலான #ArrestMeToo ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தார்.
