Covid19இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு !

கொரோனாவின் 2-வது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது . தற்போது தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் இருந்து வருகிறது .இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேசம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உயிரிழந்தவர்களை எரியூட்ட சுடுகாடுகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கு நாளையுடன் ( மே 10) முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு (மே 17 வரை) முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.