தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாடு முழுவதையும் உலுக்கி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இருப்பினும் , தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
நியாய விலைக்கடைகள் 12 மணி வரை செயல்படும்.
மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 வரை திறந்திருக்கும்
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் .
சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது
அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது
இன்றும், நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை
வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை
வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
