Elementor #13002
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சூரியன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்: 05.11.2024 அன்று லாப ஸ்தானத்தில் சனி வக்ர நிவர்த்தி ஆகிறார் | 08.11.2024 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13.11.2024 அன்று அஷ்டம ஸ்தானத்தில் புதன் வக்ரம் பெற ஆரம்பிக்கிறார் | 16.11.2024 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசியினரே! இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
