தமிழ்நாடு

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர் .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே மகன் ஜெய்ஷா . இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷா அண்மையில் பிசிசிஐ செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்னணி தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு மெல்ல மெல்ல வருகை தர தொடங்கியுள்ளனர். அண்மையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர் . அவர்களுக்கு கோயில் நிர்வாகம் உரிய மரியாதை அளித்ததுடன், பாஜக நிர்வாகிகள் பலத்த வரவேற்பு அளித்தனர்.