தமிழ்நாடு

பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது..!

மணிப்பூர் விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கிழக்கு பதிப்பக உரியமையாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஏராளமான வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான பேட்டி ஒன்றில், பத்ரி சேஷாத்ரி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Writer Badri Seshadri arrested for slandering manipur issue judge  Chandrachud

இந்த நிலையில், மெய்தி மற்றும் குக்கி பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து இன்று காலை 5 மணியளவில் பத்ரியை குன்னம் போலீஸார் கைது செய்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும், சர்ச்சைக்குரிய வகையில் பத்ரி சேஷாத்ரி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி சென்னையில் கைது..