ஆன்மீகம்

குரு பெயர்ச்சி 2023 : 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்.! முழு விவரம் இதோ..

குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பார்வை கோடி நன்மை. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். மேஷம் ராசியில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை இந்த முறை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழுகிறது.

Guru Peyarchi 2023 Palangal In Tamil Which Zodiac Sign Going To Get  Benefits Jupiter Transit Effects | Guru Peyarchi 2023: ஏற்றமும், மாற்றமும்  தரும் குருபெயர்ச்சி...! மேஷம் முதல் மீனம் வரை ...

மேஷம் ராசிக்காரங்களுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமாம் ஏன் தெரியுமா? | Mesha  Rasi/Aries Sign Person Characters and Nature - Tamil Oneindia

மேஷம்: இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் இருந்த குரு இனி ஜென்ம குருவாக அமர்கிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. கணவன் மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும்.

ரிஷப ராசி வாசகர்களுக்கு 2023 புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குருபகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குருவின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீட்டின் மீது விழுகிறது. இந்த ராசிக்காரர்கள் விரைய சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் பிரச்சினைகள் நீங்கும் சொத்து வாங்கலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. ஆயுளுக்கு வந்த கண்டம் நீங்கும்.

New Year Rasi Palan 2023 in Tamil Mithunam | பாடாய் படுத்திய அஷ்டம சனி..  இனி விடிவு காலம் தான்.. தொட்டது துலங்கும்.. - Search Around Web

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் உங்களுக்கு கல்யாண யோகம் வந்து விட்டது. 90 கிட்ஸ் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும்.

கடக ராசி அன்பர்களுக்கு 2023 புத்தாண்டு பலன்கள்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு அமர்வது பாதகத்தை ஏற்படுத்தாது. குருவின் பார்வை 2ஆமிடம், 4ஆம் இடம், 6 ஆம் இடங்களின் மீது விழுவது சிறப்பான அம்சம். குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. எதிரிகள் தொல்லை நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

New Year Rasi Palan 2023 in Tamil Simmam | வேலை பறிப்போகாமல் இருக்கணும்னா  இத பண்ணுங்க.. தொழில் எப்படி இருக்கும்? - Search Around Web

சிம்மம்: பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் குரு அமர்வது சிறப்பானது. குருவின் குருவின் பார்வை ராசியின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் இடம், 5 ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

New Year Rasi Palan 2023 in Tamil Kanni | கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு  திருமண பாக்யம் உண்டா? பரிகாரம் என்ன? - Search Around Web

கன்னி: குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடு மீதும், சுக ஸ்தானமான 4ஆம் வீடு மீது, விரைய ஸ்தானமான 12வது வீடு மீதும் விழுகிறது. குரு அஷ்டம ஸ்தானமாக சனி பகவானுடன் அமர்ந்து தனது அருட்பார்வையால் உங்களை பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும்.

துலாம் - 31-12-2022

துலாம்: பொன்னவன் குரு பகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: புதிய வாய்ப்புகள் தேடி வந்து  புத்துணர்ச்சியை தரும் | Viruchigam April Matha Rasi Palan 2021: April Month  Rasi Palan - Tamil Oneindia

விருச்சிகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு, 12ஆம் வீடு 10ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். குடும்பத்தில் உற்சாகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். நோய்களை குணப்படுத்த பணம் வரும். வெளிநாடு செல்லும் யோகம் வரும் சுப விரையம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு பதவியில் மாற்றம் வரும். சந்தோஷமான சம்பவங்கள் அதிகம் நடைபெறும்

சனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே... ஜென்மசனி முடிந்து குடும்ப  சனி ஆரம்பிக்குது | Sani Peyarchi Palan 2020-23 effects For Dhanusu Rasi -  Tamil Oneindia

தனுசு: உங்கள் அதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுகிறார். உங்களுக்கு குரு பலன் வந்து விட்டுவிட்டது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. 11 ஆம் வீட்டை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கைகூடி வருகிறது.

மகரம் - 27-12-2022

மகரம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்கிறார் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானம், ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானம், ராசிக்கு 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இந்த பார்வை விஷேசமான பலன்களை உங்களுக்குத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். பணி செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். 8 ஆம் வீட்டை பார்வையிடுவதால் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் கிடைக்கும். சிலருக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும்.

கும்பம் - 30-12-2022

கும்பம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை 11ஆம் வீடான லாப ஸ்தானம். 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. காதல் மலரும் காலம் இது. காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும் யோகம் வந்து விட்டது.

மீனம் - 27-12-2022

மீனம்: ஜென்ம குருவாக இருந்து தடைகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த குரு பகவான் இன்று முதல் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. கடந்த ஓராண்டு காலமாக நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்