தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.

Image

உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசலிங்கம் வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 93. இறுதி சடங்கு திருத்தங்கல் பாலாஜி நகரில் அவரது இல்லத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் குடும்பத்தினருக்கு அதிமுக கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.