அமைச்சர் மனோ.தங்கராஜ் தலைமையில் அரசு கேபிள் விநியோகஸ்தர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது..!
அரசு கேபிள் விநியோகஸ்தர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கேபிள்டிவி ஆப்பரேட்டர்களின் சந்தேகங்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் குமரகுருபரன் இஆப மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ் இஆப ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தின் சிறப்பம்சங்கள் :
- இன்னும் 30 நாட்களுக்குள் HD Settop BOX கிடைக்கும்.
- மின் கம்பங்களில் கட்டுவதற்கான அனுமதி அரசு கேபிள்டிவிஆபரேட்டர்களுக்கு பெற்று தரப்படும்.
- சுமார் 2000 கோடி முதலீட்டில் அரசு கேபிள் டிவி யின் துணை நிறுவனமாக வரும் TANFINET சிறந்த ஓர் இணைய நிறுவனமாக வளர்ச்சி அடையும். அதன் முகவராக அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
- பாரத் நெட் வயரில் அரசு கேபிள்டிவி நிறுவனம் பயணிக்கும்.
- மே மாதத்துக்குள் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
