அரசியல்தமிழ்நாடு

என் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நடிகை குஷ்பு

நானும் பெற்ற தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார் குஷ்பு.

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தற்போதும் சினிமா , தொலைக்காட்சி, அரசியல் என மிகவும் பிஸியாக வலம் வருகிறார் .

திமுக , காங்கிரஸில் தீவிரமாக இயங்கி வந்த குஷ்பு பாஜகவில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்று தீவிரமாக இயங்கி வருகிறார்.

എട്ടാം വയസിൽ പിതാവ് ലൈംഗിക പീഡനത്തിന് ഇരയാക്കി; ഗുരുതര വെളിപ്പെടുത്തലുമായി  നടി ഖുശ്ബു | Kushboo Sundar says her father sexually abused her when she  was 8 | Madhyamam

இவர் பத்திரிக்கையாளர் பர்க்காதத் உடனான பெண் மைய உரையாடலில் பங்கேற்று பேசியுள்ளார் . இதில் தனது சிறுவயது துயரத்தை மீடூவாக வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீடூ மூலம் பிரபல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துயரத்தை பகிர்ந்து வந்த நிலையில் தற்போது குஷ்பூ அதில் இணைந்திருக்கிறார்.

தனது 8 வது வயதில் இருந்தே சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். தந்தை குறித்து தாயிடம் சொன்னால் அவர் நம்புவாரா? என்ற தயக்கத்தால் 15 வயது வரை தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு 16 வயதான போது தான் தந்தையின் செயலை கண்டிக்கும் தைரியம் தனக்கு வந்ததாக தெரிவித்துள்ள குஷ்பூ, தனது தந்தையால் தனது தாயும் மிகவும் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்