இந்தியா

மும்பையில் தீப்பிடித்த டாடாவின் சி.என்.ஜி பேருந்து..! அதிரடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம்

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத மும்பை மாநிலத்தில் ஏகப்பட்ட விபத்துகளும் குற்ற சம்பவங்களும் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது . அந்த வகையில் மும்பையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக டாடா நிறுவனத்தின் சி.என்.ஜி பேருந்து நடுவழியில் தீப்பற்றி எரிந்ததால் , அந்நிறுவனத்தின் சுமார் 400 பேருந்துகளின் இயக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக நிறுத்தியுள்ளது.

மக்கள் கூட்டம் அலைமோதும் மும்பையில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை வாங்கி மும்பை மாநகராட்சி நிர்வாகம் இயக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான பேருந்துகளில் சி.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் டாடா நிறுவனத்தின் 400க்கும் மேற்பட்ட பேருந்துகளும் பொருந்தும் .

இந்நிறுவனத்தின் 2 பேருந்துகள் ஏற்கனவே தீ விபத்துக்குள்ளான நிலையில், நேற்று இரவு மேலும் ஒரு பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது . தீப்பற்றி எரிந்ததை கண்டு முன்கூட்டியே பயணிகள் அனைவரும் உடனடியாக இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் நிலைமை கைமீறி போயிருக்கும் .