இந்தியா

ராணுவ பணிகளில் சேர வரும் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – கர்னல் பத்ரி பேட்டி

ராணுவ ஆட்சேர்ப்பு முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ராணுவ பணிகளில் சேர விரும்புவோர் வரும் மார்ச் 15ஆம் தேதி வரையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் கர்னல் பத்ரி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் தேர்வு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 176 இடங்களில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

தேர்வு எழுதுவோர் தங்கள் வீட்டில் இருந்தே கணினி அடிப்படையிலான தேர்வில் பங்கேற்கலாம் என்றும் கர்னல் பதரி தெரிவித்தார்.