ஊட்டச்சத்து டெண்டரில் அந்த அமைச்சருக்கு ரூ.100 கோடி கமிஷனாம்..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு…
ஊட்டச்சத்து டெண்டரை மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு வழங்க 100 கோடி ரூபாய் பணம் கமிசனாக சுகாதாரத்துறை அமைச்சருக்கு டெண்டர் நிறுவனம் வழங்கி உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
பொங்கல் தொகுப்பில் முறைகேடுகள் செய்த நிறுவனங்களுக்கே மீண்டும் ஊட்டசத்து பொருட்கள் டெண்டர் வழங்கி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய அவர் ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதினால் அரசுக்கு 77-கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் சொல்லுவாரா என சுகாதாரத்துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பினார்.
பொங்கல் தொகுப்பு தரம் இல்லாமல் வழங்கிய டெண்டர் நிறுவனங்களுக்கு இனி டெண்டர்கள் வழங்ப்படாது என்று கூறிய தமிழக முதல்வர் ஏன் இப்போது ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் டெண்டரை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கி உள்ளார்.
இதனை ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்கவில்லை என்ற அண்ணாமலை ஊட்டச்சத்து டெண்டரை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு வழங்க 100-கோடி ரூபாய் பணம் கமிசனாக சுகாதாரத்துறை அமைச்சருக்கு டெண்டர் நிறுவனம் வழங்கி உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பாஜக-விற்கும் அதிமுக-விற்கும் உள்ள கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, யார் யாரோ பேசுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
