தளபதியின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடிய ரன்வீர் சிங்..! வைரல் வீடியோ இதோ…
நமது பாரத நாட்டில் சினிமாவை தாண்டி மக்களை அனைவரும் ஒன்று கூடி பார்த்து ரசிப்பது எது என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான் . இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அளவற்ற ரசிகர்கள் இருப்பது ஒவ்வரு IPL தொடரின் போதும் நம்மால் பார்க்க முடிகிறது .
அந்த வகையில் நடப்பாண்டுக்கான IPL 2022 தொடர் கடந்த 29 ஆம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரின் நிறைவு விழா கொரோனா காரணமாக நடைபெறவில்லை . இந்நிலையில் நடப்பு தொடரின் நிறைவு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அதில் ஏ.ஆர். ரகுமானின் முக்கிய இசை நிகழ்ச்சியும், ரன்வீர் சிங் நடனமும் இடம்பெற்றது.
படமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையாக இருந்தாலும் எப்போதும் மிகவும் துறுதுறுவென இருக்கும் நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். இவர் ஒரு நடனம் ஆடுகிறார் என்றால் அது எப்போதுமே படு ஜோராக இருக்கும் .
அந்த வகையில் இந்த இநுதி நிகழ்ச்சியில் ரன்வீர் சிங் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங், RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் பாலிவுட்டின் சில சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரன்வீர் சிங் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ…
