கொல்கத்தா VS ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்..! வெல்லப்போவது எந்த அணி..?
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் , சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியின் பலபரிட்சபை நடத்துகின்றன .
முதல் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று இந்த சீசனை சூப்பராக தொடங்கிய கொல்கத்தா அணி அதன்பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்று பின்தங்கி நிற்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும்.
இந்த பக்கம் ராஜஸ்தான் அணி 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் நிலைத்து நிற்கிறது . இந்த அணி பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் நல்ல வலுவான அணியாகவே பார்க்கபடுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
