முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜூவை காட்டி மிரட்டி பணம் சம்பாதித்த சிங்காரவேலன்…
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பாக அனைவரது காதுகளிலும் கேட்கும் பெயர் மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன். இவரை லிங்கா சிங்காரவேலன் என்று கூறினால் பலருக்கும் தெரியும். ஏனென்றால் லிங்கா திரைப்படத்தை வைத்து இவர் ஏற்படுத்திய சர்ச்சை தான் நீண்ட நாட்களாக திரையுலகில் பேசப்பட்டது .
சிறு சிறு படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்த இவர் பைனான்ஸ் மற்றும் தயாரிப்புப் பணியிலும் அதிகம் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் விமல் மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் .

சில ஆண்டுகளுக்கு முன்பு விமல் நடிப்பில் மன்னர் வகையறா திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தை திருப்பூர் கணேசன் என்பவர் தயாரித்தார். ஆனால் சில பொருளாதார நெருக்கடியின் காரணமாக படம் பாதியிலேயே நின்றது. பின்னர் திருப்பூர் கணேசனும் மரணமடைந்தார். இதனால் அந்தப் படத்தை விமல் தயாரிப்பதற்கு உதவி செய்வதாக கூறி உள்ளே வந்தவர்தான் சிங்காரவேலன்.
பின்னர் சில பைனான்சியர்களிடம் இந்த படத்திற்காக சில கோடிகள் கடனாகப் பெற்று ஷூட்டிங் நடத்தப்பட்டு படமும் வெளியானது. 8 கோடி வரை லாபம் பார்த்த இந்த திரைப்படம் நஷ்டம் இல்லாமல் தப்பித்துவிட்டது . ஆனால் சிங்காரவேலன் இந்தப் படத்திற்கு இரண்டு கோடி நஷ்டம் என்று பொய்க்கணக்கு கூறியிருக்கிறார்.
இதனால் சில குறிப்பிட்ட தொகையை பைனான்சியருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி விமலிடம் இருந்து வாங்கி இருக்கிறார். ஆனால் வாங்கிய பணத்தை பைனான்சியருக்கு கொடுக்காமல் அவர்களை வைத்தே விமல் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக விமல் கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் சிங்காரவேலன் விமலுக்கு தரவேண்டிய பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சிங்காரவேலன் விமலை பணம் கேட்டு மிரட்டுவது மட்டுமல்லாமல், அவரை பற்றிய சில பொய்யான தகவல்களையும் ஊடகங்களில் பரப்பி வருகிறார். இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடிய விமலுக்கு சாதகமாக சிங்காரவேலனுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் படத் தயாரிப்பில் ஈடுபடும் நடிகர்களை இமேஜ் என்ற ஒற்றைக் காரணத்தை காட்டி மிரட்டி பணம் சம்பாதித்த சிங்காரவேலனின் பலநாள் மோசடி தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது . மேலும் இவரால் பாதிக்கப்பட்ட சில நபர்களும் இவர் குறித்து தற்போது புகார் அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவர் மீது தயாரிப்பாளர் கலைப்புலி தானு பலமுறை புகார் அளித்தார் அப்போதெல்லாம் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூயுடன் கை கோர்த்து கொண்டு சினிமா தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் பதிய பட தயாரிப்பாளர்களையும் மிரட்டி பணம் பறிக்கும் வேலையை முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜூயுடன் சேர்ந்து செய்து வந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
