அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் நுழைய விட மாட்டோம்..! அட்டாக்கிங் ஸ்பீச் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் நுழைய விடமாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் என்றும், மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை என்றும் கூறினார்.

உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்கும் நிலையில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம் என்றும், ஏ. ஆர் ரகுமான் தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.