விளையாட்டு

கொல்கத்தா vs மும்பை அணிகள் இன்று மோதல்..! வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை அணி..?

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் MCA மைதானத்தில் நடைபெறுகிறது . இந்த ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன .

இந்த சீசனில் இதற்கு முன் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்த மும்பை அணி இந்த போட்டியில் முதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் காண்கிறது .

இந்த பக்கம் 3 போட்டியில் 2 வெற்றிகளை பெற்ற கொல்கத்தா அணி 3-வது வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது . இதனால் இந்த போட்டியில் கட்டாயம் இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது .