பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே பாவனியிடம் பனிப்போர் செய்யும் ராஜு..! மனஉளைச்சலில் வெளியேற நினைக்கும் பாவனி..! ப்ரோமோ-1
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு 50 நாட்களை தாண்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சுவாரசியம் பத்தாமல் சற்றும் குறையாக இருந்ததால் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக், அமீர், சஞ்சீவ் என 3 ஆண்மகன்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
வீட்டில் நுழைந்த நாளை தவிர அவர்களை வேறு எங்கும் சரியாக பார்க்க முடியவில்லை அவர்களால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை, எந்த ஒரு பரபரப்பும் இல்லை எந்த ஒரு சுவாரஸ்யமும் அவர்கள் மூவரும் வீட்டில் இருப்பது போன்றே தெரியவில்லை.
இந்நிலையில் இன்று காலை வந்த புதிய ப்ரோமோவில் ராஜு மற்றும் பாவனி இடையே மீண்டும் ஏதோ வாக்குவாதம் நடக்கிறது, மற்ற போட்டியாளர்களும் இதுகுறித்து குசுகுசுவென பேசுகிறார்கள்.
கடைசியில் உங்க டீமில் இருந்து நான் வெளியேறுகிறேன், என்னால முடியலபா எனக்கு இங்கே எதுவும் பிடிக்கவில்லை என பாவனி கூறுகிறார்.
இதோ அந்த ப்ரோமோ..
