ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம்..!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ உயரதிகாரி ஒருவரும், 4 வீரர்களும் வீரமரணமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரியும் 4 வீரர்களும் வீரமரணமடைந்தனர். துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகளை கைது செய்ய என்கவுன்ட்டர் தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், சூரன்கோட் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடந்தது என்று கூறியுள்ளார்.
