அரசியல்தமிழ்நாடு

பொருத்தமான ஒருவருக்கு “தகைசால் தமிழர் விருது” அறிவிப்பு… அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு, தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழினத்துக்கும், தமிழுக்காக பாடுபட்டவர்களுக்கு தகைசால் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் முதுபெரும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சுதந்திர தினத்தன்று தகைசால் விருது வழங்கப்படும் என்றும் அப்போது 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க வழங்க இருக்கிறார்.

தகைசால் தமிழர் விருது, பொருத்தமான ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 100 வயதைத் தொட்டு நிறைவாழ்வு வாழ்ந்து, பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர், விருது அறிவித்திருப்பது முற்றிலும் பொருத்தமானது என்றார். தமிழ்கூறும் நல்லுலகம் எண்ணி பாராட்டி மகிழத்தக்க அருமையான அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள குழுவில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றும் இனத்திற்கும், நம்முடைய மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் அரிய பங்களிப்பை வழங்கியிருக்கக் கூடியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தகைசால் தமிழர் விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.