நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறுகிறது .
இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்த கூட்ட தொடரில் மத்திய அரசு 29 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
பாராளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி நம்பிக்கை.
