பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார்…
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார், கிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 93.
1944 சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல்வேறு படங்களில் திலிப்குமார் நடித்துள்ளார். வயது முதிர்வுகாரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திலீப்குமார் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1994 ஆம் ஆண்டு திலீப்குமாருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் பட்டங்களம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளும் அவர் பல முறை பெற்றுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 99-வது பிறந்தநாளை திலீப்குமார் கொண்டாடவிருந்த நிலையில் உயிரிழந்தது இந்தி திரையுரகிலனிரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
