முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை… ஒருவரை கைது…
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் (67). ரங்கராஜன் குமாரமங்கலம், கடந்த 2000 ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், கிட்டி, டெல்லி வசந்த் விஹாரில் உள்ள இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கிட்டி குமாரமங்கலம், கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவரது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது வீட்டுக்கு அருகில் பணி செய்த ராஜூ லக்கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்த ரங்கராஜன் குமார மலங்கலம், சேலம், திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். நீதித்துறை இணை அமைச்சராகவும், எரிசக்தி துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
