இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டரசு தக்கவை செய்யும்..! தமிழக முதல்வரை மீண்டும் புகழ்ந்து தள்ளிய வைரமுத்து !
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளது . தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைய தொடங்கிய நிலையில் நாடெங்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியை கண்டாலே தலை தெறிக்க ஓடிய மக்கள், இப்போது பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இன்று கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாம் அலை தலை காட்டாமல் தடுக்க அரசு தக்கவை செய்யும் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தடுப்பூசி கிடைத்தல், தயக்கத்தை உடைத்தல், தக்கவர்க்குச் செலுத்தல், தருணத்தில் முடித்தல் நான்கும் நடந்திடில் மூன்றாம் அலை முகம் காட்டாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டரசு தக்கவை செய்யும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று குறிப்பிட்டுள்ளார்.
