தமிழ்நாடு

அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக உ.பி.-க்கள்… 4 பேர் கைது…

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட விரோதம் காரணமாக, அதிமுக நிர்வாகி ஒருவரின் பேக்கரி கடையை திமுக உடன்பிறப்புகள் அடித்து நொறுக்கிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் அதிமுக கட்சியில் நிர்வாகியாக இதுருந்து வருகிறார். இவர் வாடிப்பட்டியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக தற்போது பேக்கரி பூட்டியிருந்தது. இந்த நிலையில் பேக்கரி கடைக்கு பட்டா கத்தியுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பேக்கரி முன்பு போடப்பட்டிருந்த கண்ணாடிகள், சேர்கள், டேபிள்கள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். அருகில் உள்ள வங்கியின் ஜன்னல் கண்ணாடிகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கிவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.

இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தேர்தலின்போது நடந்த முன்விரோதம் காரணமாக, திமுகவைச் சேர்ந்த அசோக் மற்றும் அவரது நண்பர்கள் பேக்கரி கடையை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அசோக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.