தமிழகத்தில் முழு ஊரடங்கு வரவேற்கத்தக்கது – நடிகர் சித்தார்த் டுவிட்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இழந்து வருகிறோம்.
மருத்துவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. நம் ஒன்றாக இந்த பெரும் தொற்றை சமாளிக்க முடியும்” குறிப்பிட்டுள்ளார்.
