இன்று முதல் அமலுக்கு வந்தது தமிழக அரசின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம்
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது.
திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு பணிமனைகளில் இருந்து 306 வழித்தடங்களில் இயக்கப்படும் 139 நகரப் பேருந்துகளிலும் “மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை” என்ற வாசகங்கள், ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டன. இந்தப் பணியினை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
