மது பிரியர்கள் கவனத்திற்கு இனி காலை 8 முதல் நண்பகல் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும்
உலகமெங்கும் இருக்கும் பெரும்பாலான மக்கள் உடல் அலுப்புக்காகவும் வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும் இருக்கும் பிரச்னைகளுக்காகவும் மது அருந்துகிறோம் என பல காரணங்களை சொல்லி மது அருந்துகின்றனர்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவி பல உயிர்களை வேட்டையாடி வருகிறது. இதற்காக உலகில் பல இடங்களில் பல விதமான கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன . அந்த வகையில் தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளைமுதல் தமிழகத்தில் மேலும் பல்வேறு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி தற்போது நண்பகல் 12 மணிமுதல் இரவு 9 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை நாளைமுதல் குறைத்துள்ளது.
மே 6ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது குறித்து விமர்சனங்கள் எழும்பிவந்தன. தற்போது தமிழக அரசு நாளைமுதல் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் மது பிரியர்களே நேரத்தை மாற்றியது தெரியாமல் மதுக்கடைக்கு போய் சண்டைபோடாமல் உரியநேரத்திற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பொறுப்புடனும் பாதுகாப்புடனும் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
