ஜி-20 மாநாடு : உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
ஜி-20 மாநாட்டை ஒட்டி உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இதனை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று டெல்லியில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஜி20 மாநாடுக்கு முன்பாக 32 துறைகள் தொடர்பாக 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டங்கள் அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். 40 கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஜி20 மாநாட்டுக்கான திட்டங்கள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே இந்த ஜி-20 மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
