வணிகம்

    

சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வரி விதிப்புகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் அதில் 6 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.இறுதியில் 6-க்கு 3 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் நாடாளுமன்றத்தை மீறி தனிச்சையாக வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரமில்லை எனவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை டிரம்ப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சியடையத் தொடங்கின. எஃகு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.